Sunday, 5 April 2015

Hoosiers

நேற்று காலை விளையாட்டு சார்ந்த படமொன்று பார்த்தேன்.
விளையாட்டு ஆசிரியர்கள், விளையாட்டில் ஆர்வமிக்க மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் Coach Carter. பாடமாகவே வைக்கவேண்டிய படம். பலமுறை பார்த்த படம் என்பதால் புதிதாக 'Hoosiers' பார்த்தேன். இதுவும் கூடைப்பந்து பற்றிய படம். உண்மை நிகழ்வு சார்ந்து எடுக்கப்பட்ட படம்.
அமெரிக்காவின் இன்டியானா பகுதியில் உள்ள கிராமப்பள்ளிக்கூடம்.
ஆசிரியராகவும் கூடைப்பந்து பயிற்சியாளராகவும் வருகிறார் நார்மன் டேல்.
முன்னாள் நண்பரான பள்ளி முதல்வரின் வேண்டுகோளின் படி வேலைக்கு வரும் அவரை ஊரில் சிலர் விரும்பவில்லை. 

அவரின் பயிற்சிமுறைகள் புதுமையாக இருக்கின்றன.
குடிகாரராக இருக்கும் அந்த  ஊர்க்காரர் ஒருவரின்  துணையுடன் போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச்செல்கிறார்.
தொடர்ந்த முயற்சி, கடினமான பயிற்சி மூலம் அந்த கிராமப்பள்ளி அணி மாநிலப்போட்டிகளில் வெற்றிபெறுகிறது.
விளையாட்டு ஆசிரியரின் பயிற்சிமுறைகள், மாணவர்களுடன் பழகும் முறை, கூடைப்பந்து போட்டிகள் என ரசித்து பார்க்கவேண்டிய படம்.


No comments:

Post a Comment