Sunday, 5 April 2015

ஹிந்தியில் இரு படங்கள்

உலக நாடுகளில் எடுக்கப்பட்ட படங்கள் நிறைய இருக்கின்றன. இந்தியாவில்
கல்வி குறித்து எடுக்கப்பட்ட படங்களை தேடிப்பார்த்தாலென்ன?
ஹிந்தியில் இரு படங்கள்.
Admissions Open மற்றும் Paathshaala.


Accepted என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவல்
Admissions Open.

12ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள். நல்ல கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தாரிக் என்பவர் கல்வியில் புதுமை செய்வதற்காக ஒரு கல்லூரியை தொடங்குகிறார். நாக்- அனுமதி கிடைக்கவில்லை.
12 ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற அர்ஜுன், அவனது நண்பர்கள் தாரிக்கை சந்திக்கிறார்கள். 1௦௦ மாணவர்கள் சேர்ந்தால் கல்லூரியை நடத்தலாம், என்கிறார்.
அர்ஜுன் மற்றும் நண்பர்களின் முயற்சியால் மாணவர்கள் சேரும்போது எதிர்பாராவிதமாக தாரிக் இறக்கிறார். அவரது நண்பருடன் சேர்ந்து அர்ஜுன் கல்லூரியை தொடங்குகிறான்.
மாணவர்கள் அவர்களுக்கு பிடித்ததை படிக்கலாம் என்பதே கல்லூரியின் முக்கிய குறிக்கோள்.
பொறமை கொண்ட(?) எஞ்சினியரிங் கல்லூரி நிறுவனர் நாக் கமிட்டியிடம் முறையிடுகிறார்.
அர்ஜுன்,   உயர்கல்வி குறித்த கேள்விகளை எழுப்பி வாதாடுகிறான்.
ஆசிரியர்கள், பாடத்திட்டம் - இல்லை என்பதால் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க நாக் குழு மறுக்கிறது.



ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் இஷ்டம்போல திரிகிறார்கள்.
அபத்தக்கூத்தான காட்சிகளைக்கொண்ட படம்.
என்றாலும் உயர்கல்வி, பிள்ளைகள் மீது பெற்றோரின் அழுத்தம் குறித்து சில கேள்விகளை எழுப்புகிறது.

Paathshaala.

பள்ளியைப்பற்றி பேசும் படம். பாரம்பரியமான பள்ளி. வருமானம் ஈட்டவேண்டும் என நிர்வாகம் நினைக்கிறது. கல்விக்கட்டணம்,உணவக விலைகள் உயர்த்தப்படுகின்றன. பள்ளி மீடியாவில் புகழ் பெற்றால் அதிக கட்டணம் வாங்கலாம், நிறைய மாணவர்கள் சேருவார்கள் என்று நிர்வாகம் முயல்கிறது.
தனியார் தொலைக்காட்சி மூலம் சமையல்,பாடல் போன்ற நிகழ்ச்சிகளில் கட்டாயப்படுத்தி மாணவர்களை ஈடுபடுத்துகிறார்கள். மாணவர்கள் படும் துயரத்தை கண்ட ஆசிரியர்கள்  வருந்துகிறார்கள்.
ஆங்கில ஆசிரியரின் முயற்சியால் போராட்டம் வெடிக்கிறது.
அனைத்து சேனல்களும் போராட்டம் பற்றிப்பேசுகின்றன.
பள்ளி காப்பாற்றப்படுகிறது.
உதிரியான காட்சிகள், மெதுவாக நகரும் படம். எனினும் தலைமையாசிரியராக வரும் நானா படேகர் பேசும் இறுதி வசனங்கள் மிக முக்கியமானவை.
'பள்ளிகளில் அடிப்படை வசதிகள் தேவை.
அவற்றை அதிகரிக்கவும் செய்யலாம்.
ஆனால்,பள்ளி என்பது 5 நட்சத்திர விடுதி அல்ல. பல பள்ளிகளில் அது போல வசதிகள் என்று சொல்லி பணம் பறிக்கிறார்கள்.'

கல்வி குறித்த இந்தியப்படங்கள் சில என்னிடம் உண்டு.
 நம்மவர்- கல்லூரி மாணவர் , பேராசிரியரைப்பற்றிய கதை. கமல் படம்.
சாட்டை - உலகப்படங்களைப்பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை.
குறைகள் இருந்தாலும் முயற்சிகள் தொடங்குவதை பாராட்ட வேண்டும்.
நான் பார்த்தவற்றுள் மிகச்சிறந்த படம் என்றால் மலையாளத்தில் வெளிவந்த 'மாணிக்கக்கல்லு'.
. கல்வி அமைச்சரின் ஊரில், அவர் படித்த பள்ளி.
1௦ ஆம் வகுப்பு அரசுத்தேர்வில் அனைவரும் தவறியதால் கல்வி அமைச்சர் கோபப்படுகிறார்.
புதிய ஆசிரியர் வருகிறார். கடும் முயற்சி. எதிர்க்கும் சக ஆசிரியர்கள்.
பொது மக்களின் உதவியை பெறுகிறார்.
மாணவர்களின் அன்பை பெறுகிறார்.மாற்றங்களை ஏற்படுத்துகிறார்.
பலமுறை ரசித்து, பார்த்த படம்.
 ஆசிரியர்களுக்கொரு பாடம்.

No comments:

Post a Comment